ஊட்டியில் சிறுத்தை நடமாடியதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டபெட்டா. கவர்னர்சோலை, கேர்ன்ஹில் உள்ளிட்ட அடர்ந்த வனப்பகுதிகள் இருக்கின்ற நிலையில் இங்கு கரடி, காட்டெருமை, கடாமான், சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளும் வாழ்ந்து வருகின்றது. இவைகள் உணவு மற்றும் தண்ணீருக்காக வன பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிக்கு வந்து விடுகின்றது.
இந்நிலையில் நேற்று முன்தினம் சிறுத்தை ஒன்று சாலையில் நடமாடும் பொழுது வாகனத்தின் முகப்பு வெளிச்சம் தெரிந்ததை பார்த்து சிறுத்தை சாலையோரத்தில் பதுங்கி இருந்தது. அவ்வழியாக சென்றவர்கள் அதை செல்போனில் வீடியோ எடுத்து இணையத்தில் பரப்பினார்கள். சிறுத்தை நடமாட்டத்தால் பொது மக்கள் பீதியில் உள்ளனர். இதனால் பொதுமக்கள் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.