Categories
மாநில செய்திகள்

ஊடங்கில் கூடுதல் தளர்வுகள்…. 4 மாதத்திற்கு பின் மகிழ்ச்சியில் மக்கள்….!!!!

தமிழகத்தின் இரண்டாம் அலை கொரோனா பரவல் கடந்த ஏப்ரலில் அதிகரித்தது. பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் பின்னர் தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகளும் படிப்படியாக கொடுக்கப்பட்டு வருகிறது.தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி செப்டம்பர் 6ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் சுமார் 4 மாதத்திற்கு பிறகு கடற்கரைகள், பூங்காக்களில் மக்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மெரினா, பெசன்ட் நகர், திருவான்மையூர், கடற்கரைகளில் அனுமதி தரப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், உதகையில் தாவரவியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா, படகு இல்லம் மற்றும் பைக்காரா படகு இல்லம் இன்று முதல் திறக்கப்படுகிறது.

Categories

Tech |