ஒரு சில ஊடகங்களை தவிர வேறு யாரும் என்னுடைய பேட்டிகளை ஒளிபரப்புவது இல்லை. ஊடகங்கள் மன சாட்சியுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். திருச்சியில் காவல் நிலையத்தில் கையெழுத்து போட வந்த போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ராயபுரம், திருச்சி, மத்திய குற்றப்பிரிவு அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கையெழுத்து போட செல்கின்றேன்.
அந்த அளவுக்கு இந்த அரசுக்கு என் கையெழுத்து முக்கியத்துவமாக உள்ளது. அதனால் தான் தினம்தோறும் காவல்நிலையத்தில் வழக்குகளால் கையெழுத்து போடுகிறேன். சசிகலாவின் சுற்றுப்பயணத்தால் அதிமுகவில் எந்த தாக்கமும் ஏற்படாது. இந்தியா ஒரு சுதந்திர நாடு என்பதால் யாரும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். எனவே சசிகலாவும் எங்கு வேண்டுமானாலும் சுதந்திர பறாவையாக சுற்றலாம்” என்று தெரிவித்துள்ளார்.