ஊஞ்சல் கயிறு கழுத்தை இறுக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி பட்டாளம் போலீஸ் குடியிருப்பில் சுகுணா என்பவர் வசித்து வருகிறார். இவர் அசோக் நகரில் இருக்கும் போலீஸ் பயிற்சி முகாமில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் ராஜ்குமார் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு நிக்கிலன்(14), நவீன்(11) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். நேற்று மாலை ராஜ்குமார் நிக்கிலனிடம் சாப்பிட ஏதாவது வாங்கி வர வேண்டுமா? என கேட்டுள்ளார். இதனையடுத்து சுகுணாவும், நவீனும் கடைக்கு சென்றனர். வீட்டில் நிக்கிலன் மட்டும் இருந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டிற்கு வந்த ராஜ்குமார் ஊஞ்சல் கயிறு கழுத்தை சுற்றிய நிலையில் நிக்கிலன் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக நிக்கிலனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு நிக்கிலனை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நிக்கிலன் ஊஞ்சலில் ஆடிய போது எதிர்பாராதவிதமாக கயிறு கழுத்தை இறுக்கியதால் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.