Categories
அரசியல்

உ.பியில் தாலிபான் ஸ்டைலில் ஆட்சி…. மக்களுக்கு சுதந்திரம் இல்லை…. பரபரப்பு குற்றசாட்டு…!!!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி டெல்லியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், வெளிநாட்டு நபர்களுக்கு தலை வணங்காமல் மிகவும் துணிச்சலுடன் தைரியத்தோடும் போராடும் ஒரே கட்சி திரிணாமுல் காங்கிரஸ் கட்சிதான். அரசியல் ரீதியாக நாங்கள் எதையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உலக அமைதி மாநாட்டிற்காக அழைக்கப்பட்டார், ஆனால் பிரதமர் மோடியை விட மம்தா பிரபலமாக இருப்பதன் காரணமாக அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது உத்தரபிரதேசத்தின் நிலையை நாம் பார்த்தால், அங்கு தலிபான்கள் ஸ்டைலில் பாஜக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. அங்குள்ள மக்களுக்கு சுதந்திரம் இல்லை. எல்லாவற்றையுமே யோகி ஆதித்யநாத் தான் முடிவு செய்து கொண்டிருக்கிறார்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |