Categories
மாநில செய்திகள்

உஷார்…! வீட்டிலிருந்தே வேலை வேண்டுமா….? ரூ.8,47,000 இழந்த பெண் அதிர்ச்சி….!!!!

இன்றைய காலகட்டத்தில் வீட்டில் இருந்தே ஒரு சில நிறுவனங்களுள் பெண்கள் வேலை செய்து வருகின்றனர். ஆனால் ஒரு சில நிறுவனங்கள் போலியான விளம்பரத்தை கொடுத்து வீட்டில் இருக்கும் பெண்களை குறி வைத்து ஏமாற்றி மோசடி செய்து வருகிறது. அந்த வகையில் வீட்டிலிருந்து பணம் ஈட்டலாம் என்ற விளம்பரத்தை நம்பி ஏமாந்துள்ளார் புதுக்கோட்டை யை சேர்ந்த சீதாலட்சுமி என்ற பெண். அந்த போலி நிறுவனத்தில் ரூ. 100 முதலீடு செய்த அவருக்கு ரூ.160ம், பிறகு ரூ.500க்கு ரூ.2,000ம் கிடைத்துள்ளது.

இப்படியாக ரூ.8,47,000 வரை செலுத்தியவருக்கு அதன்பிறகு செலுத்திய பணமே கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். தீர ஆராயாமல் இது போன்ற போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்.

Categories

Tech |