நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ஏனென்றால் அதில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன.
ஆனால் சில உணவுகளை முறை தவறி சாப்பிடுவது உடலின் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். அதன்படி பால் ஆரோக்கியத்திற்கு நல்லது. அது எலும்புகளை வலுப்படுத்தும் அதோடு மட்டுமல்லாமல் நமது நோய் எதிர்ப்பு சக்தியையும் வளப்படுத்துகிறது. அது மட்டுமன்றி மன சோர்வு மற்றும் புற்றுநோயை தடுக்க உதவுகிறது. ஆனால் பாலுடன் உட்கொள்ளும் சில உணவு வகைகளால் நம் உடலுக்கு தீங்கு விளையக்கூடும். அதன்படி மாம்பழம் மற்றும் வாழைப்பழத்துடன் பால் கலந்து மில்க் ஷேக்கை குடிக்க சிலர் விரும்புவர்.
வெண்ணை தடவப்பட்ட பிரட் உடன் பால் குடிக்க விரும்புவதும் உண்டு. அதுமட்டுமன்றி பிஸ்கட் உடன் பால் குடிப்பது பலருக்கும் வழக்கம். பால் மற்றும் தயிர் இரண்டும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆனால் இரண்டையும் ஒருபோதும் ஒன்றாக உண்ணக் கூடாது. அவ்வாறு செய்தால் அமிலத்தன்மை, வயிற்றில் வாயு மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். சளி மற்றும் தொண்டை புண் போன்ற பிரச்சினைகளும் ஏற்படும்.
சிட்ரஸ் வகை பழங்களை பாலுடன் சேர்த்து சாப்பிடுவது தவறு,பால் குடித்த பிறகும் அல்லது பால் குடிப்பதற்கு முன்பாகவும் குறிப்பு பழங்கள் அல்லது குறிப்பான சுவை கொண்ட பொருட்களை உண்ணக் கூடாது. அவ்வாறு செய்தால் தோல் பிரச்சினைகள் ஏற்படும். வாழைப்பழத்தை பாலுடன் ஒன்றாக உட்கொள்வது செரிமான சக்தியை பலவீனப்படுத்தும். மேலும் மீன் சாப்பிட்ட பிறகு ஒரு போதும் பால் குடிக்கக்கூடாது. இவை இரண்டிலும் மாறுபட்ட தன்மைகள் இருப்பதால் ஒன்றாக சாப்பிடும் போது வயிற்று வலியை ஏற்படுத்தும். உணவுக்கு விஷத் தன்மையை கொடுக்கும்.
மேலும் பாகற்காய், வெண்டைக்காய், பலா பழம் ஆகியவற்றை சாப்பிட்ட பிறகும், பயிறு மற்றும் உளுத்தம் பருப்பு உண்ட பிறகும் பால் குடிக்கக்கூடாது. அவ்வாறு செய்தால் அரிப்பு, தோல் அலர்ஜி மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். எனவே பாலுடன் இந்த உணவுகளையெல்லாம் சாப்பிடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.