Categories
தேசிய செய்திகள்

உஷார்! கள்ள நோட்டுகள் புழக்கம் அதிகரிப்பு…. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்…!!!!

இந்தியாவில் புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை தற்போது 197 மடங்கு அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இதுபற்றிய மாநிலங்களவையில் அரசு வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின்படி, 2016 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 197 மடங்கு அதிகரித்துள்ளது. அரசு வெளியிட்டுள்ள செய்தி இன் படி 2016 – 17 ஆம் ஆண்டில் இந்தியாவில் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை39 ,453 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இதனுடன் 2000 ரூபாய் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்திருக்கிறது. அரசு தகவல்படி 2000 ரூபாய் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 638 லிருந்து8,798ஆக அதிகரித்துள்ளது. 50ரூபாய் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை  9,222 லிருந்து  24,802  ஆக அதிகரித்திருக்கிறது. இருப்பினும் 10 ரூபாய், 20 ரூபாய் மற்றும் 100 ரூபாய் கள்ள நோட்டுகளின் புழக்கம் குறைந்திருக்கிறது. 2020 ஆம் ஆண்டில்8,30,000 கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பட்ஜெட் கூட்டத் தொடரின் போது நாடாளுமன்றத்தில் அரசு கூறியிருக்கிறது.

கள்ள நோட்டுகளின் புழக்கம் கடுமையாக அதிகரித்து வருவது  பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஏனெனில் 2016ஆம் ஆண்டில் 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு நீக்கம் செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக பண மதிப்பு  நீக்கம் செய்யப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார். அதன் பின் புதிய 500 ரூபாய் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப் படுத்தப்பட்டிருந்தது. இருப்பினும் இத்தனை ஆண்டுகளாக கள்ளநோட்டுகள் தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

Categories

Tech |