Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

உஷார்…. இனி பேப்பரில் வடை, பஜ்ஜி வழங்க கூடாது…. தமிழகத்தில் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். பல தரமற்ற உணவுகளால் உயிரிழப்பு ஏற்படுவதால் அரசு இதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது. சென்னையில் பல பெரிய உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சிகள் கைப்பற்றப்பட்டன. அதனால் அந்த ஹோட்டல்கள் மூடப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பல ஹோட்டல்களில் தரமான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறதா என சோதனை நடந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் சிறிய கடைகளில் கூட தயாரிக்கப்படும் உணவுகள் சுத்தமாகவும் தரமாகவும் இருக்க வேண்டும் என உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு உணவுகளை பரிமாறும் போது கையுறை மற்றும் தலை உறை போன்றவற்றை அணிய வேண்டும்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கடைகளில் விற்கப்படும் உணவுகள் குறித்து புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் டீக்கடையில் அச்சிட்ட பேப்பரில் வடை, பஜ்ஜி வழங்க தடை விதிக்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். தடையை மீறி உணவுப்பொருட்களை அச்சிட்ட பேப்பரில் தந்தால் அபராதம் மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |