Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உஷார்…. அரசு உத்தரவை மீறி திருமணம்…. ரூ.1 லட்சம் அபராதம் வசூல்….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமன்றி பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அமலுக்கு வந்தது. மேலும் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 26 ஆம் தேதி  முதல் பல கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் சென்னை புரசைவாக்கம் ராஜா அண்ணாமலை சாலையில் உள்ள எம் எஸ் ஆர் திருமண மண்டபத்தில் ஒட்டெரி கொசப்பேட்டை பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவரின் இல்ல திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று கூறி அனுமதி வழங்கியுள்ளனர். ஆனால் திடீரென அதிகாரிகள் திருமண மண்டபத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அரசு உத்தரவை மீறி 200க்கும் அதிகமான நபர்கள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அதிக கூட்டத்தை கூட்டி அதன் காரணமாக மண்டபத்தின் உரிமையாளருக்கு 90 ஆயிரம் , திருமணம் நடத்தியவர்களுக்கு 10,000 என மொத்தமாக ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து பணத்தை வசூல் செய்தனர்.

Categories

Tech |