ஏராளமான பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் பகுதியில் இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் யோகா ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு முகமூடி அணிந்த ஒரு வாலிபர் உடல் ரீதியாக பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்த அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் வணிக வளாகங்கள், கடைகள் போன்ற பொது இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் ஒரு வாலிபர் சந்தேகம் படும்படியாக இருந்துள்ளார். மேலும் போலீசார் அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் பிரபல மல்யுத்த வீரர் கவுஷல் பிபாலியா என்பது தெரியவந்துள்ளது.
இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் 2019- ஆம் ஆண்டு வரை 74 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று உள்ளார். ஆனால் இவர் முகமூடி அணிந்தபடி 100-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் பயத்தின் காரணமாக இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.