தமிழகத்தில் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முக்கிய அரசியல் புள்ளிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் மிகப்பெரிய ரெய்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அரசியல்வாதிகள் மற்றும் திரைப் பிரபலங்கள் சிலரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதில் பல்வேறு முக்கிய பிரபலங்கள் சிக்கியுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முக்கிய அரசியல் புள்ளிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் மிகப்பெரிய ரெய்டு நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு மத்தியில் முக்கிய புள்ளிகளை குறி வைத்து நடக்க உள்ள இந்த ரெய்டு சீட் பேரத்திற்கான ரெய்டு என்று கூறப்படுகிறது. அதனால் சில அரசியல்வாதிகள் மற்றும் பினாமிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.