Categories
சினிமா தமிழ் சினிமா

‘உழைச்சா தான் பொழைக்க முடியும்’… ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கும் ‘சர்வைவர்’… அதிரடியான புரோமோ…!!!

நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கும் சர்வைவர் நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் அர்ஜுன். கடைசியாக இவர் சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்கும் பிரண்ட்ஷிப் படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர இவர் மலையாளத்தில் அரபிக்கடலின்டே சிம்ஹம், தெலுங்கில் கில்லாடி போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

https://www.youtube.com/watch?v=BO-oXsDjFVI

தற்போது நடிகர் அர்ஜுன் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க இருக்கிறார். அதன்படி ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் உலகின் மிகப்பெரிய ரியாலிட்டி நிகழ்ச்சியான சர்வைவர் என்ற நிகழ்ச்சியை தான் அர்ஜுன் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் அதிரடியான புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

 

Categories

Tech |