வியாபாரிகள் கோரிக்கையின்படி சந்தை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உழவர் சந்தை அமைந்துள்ளது. இந்த சந்தையில் விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் சில வியாபாரிகள் மண் தரையில் அமர்ந்து வியாபாரம் செய்கின்றனர். எனவே இவர்கள் தங்களுக்கு கட்டிடம் அமைத்து தருமாறு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்த கோரிக்கையின்படி உழவர் சந்தைக்கு நிதி ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து சந்தை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை துணை இயக்குனர் உலகம்மை முருகக்கனி பார்வையிட்டார். இவர் பணிகளை தரமாக முடிக்க வேண்டும் என கூறினார்.