Categories
கிரிக்கெட் விளையாட்டு

உள்ள வந்தா பவர்டி…! அண்ணா யாரு ? தளபதி…. விஜயுடன் தெறிக்கவிட்ட வருண் சக்கரவர்த்தி …!!

இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடிய தமிழக வீரர் வருண் சக்கரவத்தி நடைபெற்று முடிந்த 13ஆவது இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் தனது மயாஜால சுழலின் மூலம் எதிரணியினருக்கு சவால் விடுத்தார். 2020 இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் முதல் வீரராக 5 விக்கெட்டுக்களை வீழ்த்திய வருண் சக்கரவர்த்தி 2020 இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் ஒரேயொரு வீரராக 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

 

 

இதன் மூலம் வருண் சக்கரவர்த்திக்கு இந்திய 20ஓவர் அணியில் இடம் கிடைத்தது. ஆனால் துரதிஸ்டவசமாக உபாதைக்குள்ளானதன் காரணமாக  20ஓவர் அணியில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து 2020 இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் அசத்திய மற்றுமொரு தமிழக வீரர் தங்கராசு நடராஜனுக்கு இடம் கிடைத்தது.

இந்நிலையில் அவுஸ்திரேலிய சுற்றுத்தொடரை இழந்த வருண் சக்கரவர்த்தி தற்போது இந்தியாவில் உள்ளார். அண்மையில் டுவிட்டர் தளத்தில் தடம்பதித்த வருண் சக்கரவர்த்தி, இளைய தளபதி விஜய் உடன் இணைந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படத்தில் உள்ள வந்தா பவராடி. அண்ணா யாரு.. தளபதி.. வாத்தி கம்மிங்.. வாத்தி ரைடு என குறிப்பிட்டு டுவிட் செய்துள்ளார்.

 

இதனை இந்திய அணியின் விக்கெட் காப்பாளரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் அணித்தலைவருமான தினேஷ் கார்த்திக் கனவு பலித்தது என டுவீட் செய்துள்ளார். இப்புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.

Categories

Tech |