Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

உள்ளே சென்ற பேருந்து…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

பேருந்தை மறித்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை தாக்கிய மர்ம நபர்களை தீவிரமாக தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சிதம்பரத்திலிருந்து காரைக்கால் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தின் ஓட்டுனராக பத்மநாபன் என்பவரும், நடத்துனராக சபரி என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில்  பேருந்து சீர்காழி புதிய பேருந்து நிலையத்திற்குள் சென்றுள்ளது. அப்போது அங்கு வந்த 20-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் பேருந்தை மறித்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை கீழே இழுத்து வந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். அதன்பின் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து பேருந்து ஓட்டுநர் பத்மநாபன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |