தமிழகத்தில் நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் அதிமுக பெரும் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் மூன்றாவது கட்சியாக உள்ள மக்கள் நீதி மையம், நாம் தமிழர் கட்சி சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. அதேபோல பாஜகவும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஆனால் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சுயேச்சையாக போட்டியிட்ட 169 வேட்பாளர்களின் 110 பேர் வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றிருப்பது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. வெறும் விஜய் பெயரை மட்டுமே பயன்படுத்தி தேர்தலில் நின்ற சுயேச்சை வேட்பாளர்கள் ஏராளமானவர்கள் வெற்றி பெற்றுள்ளது சம்பவம் மற்ற அரசியல் கட்சியின் பேசுபொருளாக மாறியுள்ளது.
இது குறித்து பலரும் விஜய் மக்கள் இயக்கத்தை பாராட்டி வரும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார். உள்ளாட்சி தேர்தலை பொறுத்த வரைக்கும் உள்ளூர் செல்வாக்கு தான் முக்கியம். விஜய்க்காக மக்கள் வாக்களித்தார்கள் என்று நான் நினைக்கவில்லை. அதிக இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் வென்றிருந்தால் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.