Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்…. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்…. அனுப்பும்பணி தீவிரம்…!!

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மின்னணு  வாக்குப்பதிவு  இயந்திரங்கள் வாகனங்கள் மூலம் தேர்தல் நடைபெறும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் பேரூராட்சி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் நகராட்சிகள் மற்றும் திருபுவனம், வேப்பத்தூர், திருவிடைமருதூர், திருவையாறு, திருப்பனந்தாள், திருநாகேஸ்வரம், திருக்காட்டுப்பள்ளி, சுவாமிமலை, பெருமகளூர், பேராவூரணி, பாபநாசம், மெலட்டூர், மேலைத்திருப்பூந்துருத்தி, மதுக்கூர், சோழபுரம், அய்யம்பேட்டை, அம்மாபேட்டை, ஆடுதுறை, வல்லம், ஒரத்தநாடு  பேரூராட்சிகளில்   உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த உள்ளாட்சித் தேர்தலுக்காக 750 வாக்குச்சாவடிகள் மற்றும் 905 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குச்சாவடிகளுக்கு தேவையான உபகரணங்களை எடுத்துச் செல்வதற்காக 56 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் இருந்து தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளுக்கு 56 வாகனங்கள் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குச்சாவடிகள் வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் பிரித்து அனுப்பப்பட்டுள்ளது.மேலும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறை ஆய்வாளர்கள் உள்ளாட்சி தேர்தலுக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Categories

Tech |