தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நிறைவேறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுவதாக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக அங்கம் வகித்தது. இந்நிலையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் இன்றும் நாளையும் விருப்ப மனு தாக்கல் செய்யலாம்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநில துணை பொது செயலாளர்கள் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்வார்கள். விண்ணப்பித்தவர்களில் இடம் உயர்நிலை குழு மூலம் நேர்காணல் நடத்தி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாமக ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.