Categories
மாநில செய்திகள்

“உள்ளாட்சி தேர்தல்” எத்தனை மின்னணு இயந்திரங்கள்…. எத்தனை வாக்குச்சாவடிகள் தெரியுமா….?

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்ய தொடங்கிய நிலையில் பிப்ரவரி 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் 2,79,56,754 வாக்காளர்கள் தங்கள் வாக்கினை செலுத்த முடியும்.

அதோடு 33,029 வாக்குசாவடிகள் தேர்தலுக்காக அமைக்கப்பட்டு ஒரு வாக்குச்சாவடியில் 4 அதிகாரிகள் வீதம் 1.33 லட்சம் அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபட இருக்கிறார்கள். மேலும் இந்த தேர்தலுக்காக 55,337 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |