நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 4 நாட்கள் மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் வருகின்ற 19ஆம் தேதி நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்குப்பதிவு நடைபெறும் இடங்கள் மற்றும் அதனை சுற்றி 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள அயல்நாட்டு மதுக்கடைகள், மதுக்கூடங்கள், பார்கள் மற்றும் உரிம வளாகங்கள் போன்றவை 16ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி நள்ளிரவு வரையிலும் மூடப்பட வேண்டும்.
இதனையடுத்து வாக்கு எண்ணிக்கை நாளான 22-ம் தேதியும் மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் அறிவித்துள்ளார். மேலும் தடையை மீறி மதுக்கடைகளை திறந்தாலோ அல்லது மறைமுகமாக விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.