திமுக அரசின் நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து கிடைத்திடும் வகையில் உள்ளாட்சித் தேர்தலில் அதிகபடியான வாக்களிக்க வேண்டும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். விழுப்புரம் மத்திய மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 14-ஆவது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் ரவிச்சந்திரனை ஆதரித்து உயர்கல்வி துறை அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான பொன்முடி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதேபோன்று கண்டாச்சிபுரம், அடுக்கம், காடகனூர், முகையூர், வீரங்கிபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் அவர் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அமைச்சர் பொன்முடி, கடந்த 4 மாதத்தில் தமிழ்நாடு முழுவதும் எண்ணற்ற நலத் திட்ட உதவிகள் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இதுபோன்ற நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து கிடைக்கிற உள்ளாட்சித் தேர்தலிலும், திமுக வெற்றி பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பொறுப்பு கூடுதலாக சுப்ரியாசாதுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளராக இருக்கும் சுப்ரியாசாது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.