Categories
அரசியல்

உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி…. மதிமுக வைகோ கொடுத்த வாக்குறுதி…!!!

தமிழக முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் அண்ணா சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின் செயலாளரை சந்தித்து பேசிய அவர், தற்போது சகோதரர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இது அண்ணாவின் கனவை நனவாக்கும் ஆட்சியாக இருக்கிறது. அனிதா முதல் கனிமொழி இதுவரை 15 இளம் பிஞ்சுகள் நீட் தேர்வுக்கு பலியாகியுள்ளனர்.

அவசர காலங்களில் கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றியதுதான் இந்த தற்கொலைகளுக்கு காரணமாக உள்ளது. திமுக அரசு நீட் தேர்வை எதிர்த்து சட்டப் போராட்டத்தில் இறங்கி உள்ளது. நீதிமன்றத்தில் நிச்சயம் நீதி கிடைக்கும் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போது திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். உள்ளாட்சி தேர்தலிலும் அதே கூட்டணி தொடரும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |