வாக்காளர் அட்டை இல்லாதவர்களும் வாக்களிக்கலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.. தேர்தலுக்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் 11 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்காளர்கள் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆதார் அட்டை, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி/அஞ்சலக கணக்கு புத்தகம், லைசென்ஸ், பான் கார்டு, தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கிய மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு, பாஸ்போர்ட், தேசிய மக்கள் பதிவேட்டின் கீழ் தலைமை பதிவாளர் வழங்கிய ஸ்மார்ட் கார்டை வாக்களிக்க காண்பிக்கலாம்.
மேலும் புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், எம்.பி. எம்எல்ஏக்கள் அடையாள அட்டையை பயன்படுத்தலாம். மத்திய /மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்களின் தொழிலாளர் பணி அடையாள அட்டையை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது..