முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது நேர்மையாக நடைபெறுமா? என்ற ஐயம் உள்ளதாக கூறியுள்ளார்.
இதனைக்குறித்து அவர் பேசியதாவது, “உள்ளாட்சித் தேர்தல் நியாயமான முறையில் நடத்துவதற்காக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளனர். மாணவர்களுக்கு வாழ்வாதார பிரச்சனையாக நீட்தேர்வு உள்ளது.
மேலும் தமிழக அரசால் நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய இயலாது என தெரிந்தும், அப்பாவி மாணவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. திமுக அரசானது தேர்தல் நடைபெறுவற்கு முன்பே அடக்குமுறை செய்யும் நிலையில் வாக்கு எண்ணிக்கை மட்டும் எவ்வாறு நேர்மையாக நடைபெறக்கூடும்? என்ற கேள்வி உள்ளது” என தெரிவித்துள்ளார்.