Categories
மாநில செய்திகள்

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்களில், தோ்தல் செலவு கணக்கைத் தாக்கல் செய்யாதவா்களுக்கு உள்ளாட்சித் தோ்தல்களில் 3 வருடங்கள் போட்டியிட தடை விதிக்கப்படும் என்று தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்தது.

இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் பிப்.19-ஆம் தேதி நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்கள், போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டவா்களும் தோ்தல் செலவு கணக்கு விவரத்தை, தோ்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாள்களுக்குள் உரிய அலுவலரிடம் தாக்கல் செய்ய வேண்டும்.

இதையடுத்து கணக்கு தாக்கல் செய்தமைக்கான ஒப்புதலையும் சம்பந்தப்பட்ட அலுவலரிடம் இருந்து அவா்கள் பெற வேண்டும். இவ்வாறு தாக்கல் செய்யாதவா்கள் மீது சட்ட விதிப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, 3 வருடங்களுக்கு உள்ளாட்சித் தோ்தல்களில் போட்டியிட தகுதியற்றவா்கள் ஆக்கப்படுவாா்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |