Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

உள்மூலமா? வெளிமூலமா…? இதோ தீர்வு நிச்சயம்…!!

மூல நோயிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் பற்றிய தொகுப்பு.

மூல நோய் உள்ளவர்கள் இந்த கீரையை அடிக்கடி சமைத்து உண்ண மூலநோய் கட்டுப்படும்.

தண்டு கீரையில் இரும்புச் சத்தும், சுண்ணாம்புச் சத்தும் மிகுந்துள்ளது. அது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.

நாயுருவி இலை, தண்டு ,மிளகு இந்த மூன்றையும் தேன் விட்டு அரைத்து கொட்டை பாக்கு அளவு சாப்பிட மூல நோய் தீரும்.

ஆவாரை கொழுந்தை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி ஒத்திட்டு வர மூலமுளை கருகும். அதனால் ஏற்படும் கடுப்பும் ,ஊழலும் தனியும்.

நல்லெண்ணையை உடலில் தேய்த்து குளித்தால் மூல சூட்டை தணிக்கும். மேலும் அது உடலில் படியும் எண்ணெய் பசையை அகற்றி தோல் பகுதியை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் வியர்வை வெளியேற்றம் சீராக நடைபெறும்.

பசும்பாலில் ஒரு துளி எலுமிச்சை சாற்றை கலந்து குடித்து வர ரத்த மூலம் கட்டுப்படும். அத்திப்பால் அத்திமர வேரில் இருந்து எடுக்கப்படுகிறது. இது மூல சூட்டை தணிக்கும். மேலும் சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்தும்.

நார்ச்சத்துள்ள கோதுமை, கொண்டை கடலை புதினா கீரை கருவேப்பிலை வெங்காயம் முட்டைகோஸ் முதலியவற்றை தினமும் ஏதாவது ஒன்றை உணவில் சேர்த்துக் கொண்டால் மூல நோய் கட்டுப்படுவதுடன் குடல் புற்றுநோய் வராது.

ஆவாரம் பூ பட்டை இவற்றுடன் வேர் சூரணம் சேர்த்து அரைத்து அதில் இரண்டு சிட்டிகை அளவு பசு நெய்யில் சேர்த்து 48 நாட்கள் உட்கொள்ள உள்மூலம் குணமாகும்.

Categories

Tech |