Categories
தேசிய செய்திகள்

உள்நாட்டு விமான பயணிகளுக்கு…. இதற்கு மட்டுமே அனுமதி…. வெளியான புதிய தகவல்….!!!!

விமான நிலையங்களில் பாதுகாப்பு பொறுப்பை கவனித்து வரும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரை ஐ.ஜி. விஜய் பிரகாஷ், சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு பிரிவினருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் எழுதியிருப்பதாவது, சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு பிரிவில் முந்தைய சுற்றறிக்கையின் படி, விமானத்தில் பயணிகள் பயணிக்கும் போது தங்களுடன் ஒரே ஒரு கைப்பை மட்டுமே வைத்திருக்க வேண்டும்.

ஆனால் பயணிகள் இரண்டு, மூன்று கைபைகளுடன் பாதுகாப்பு சோதனைக்கு வருகின்றனர். அவ்வாறு வருவதால் சோதனை நடத்த நீண்ட நேரம் ஆகிறது. மேலும் நெரிசல் ஏற்பட்டு சக பயணிகளுக்கு அசவுகரியம் ஏற்படுகிறது. இதனால் பாதுகாப்பு பிரச்சனையும் உண்டாகிறது. அதனால் ஒரு பயணி ஒரு கைப்பையுடன் மட்டுமே விமானத்தில் ஏற வேண்டும் என்ற விதிமுறையை அமல்படுத்த வேண்டும். இதையடுத்து விமான பயணிகள் மற்ற கைப்பைகள், உடைமைகள் ஆகியவற்றை விமானத்தின் சரக்குப் பிரிவில் ஏற்றப்பட வேண்டும் .இதுபற்றி விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு வழிகாட்ட வேண்டுமென்று ஐஜி விஜய் பிரகாஷ் கூறியுள்ளார்.

Categories

Tech |