இந்தியாவில் கொரோனா காரணமாக ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் சர்வதேச விமான சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்ததால் உலக நாடுகள் பலவும் இந்தியாவுடனான விமான சேவைகளை தடை செய்து அறிவித்திருந்தன.
இந்நிலையில் 28 நாடுகளுடன் இந்திய விமான போக்குவரத்து துறை ஏற்படுத்திக் கொண்ட புத்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உள்நாட்டுவிமான போக்குவரத்தை 72 சதவீதமாக விமானப் போக்குவரத்து அமைச்சகம் அதிகரித்துள்ளது. இது முன்பு 65 சதவீதமாக இருந்தது. தற்போது 72 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.