பிரான்ஸ் தங்கள் நாட்டிற்குள் சுமார் இரண்டரை மணி நேரங்களில் ரயிலில் பயணிக்கக்கூடிய இடங்களுக்கு உள்நாட்டு விமான சேவையை தடை செய்யவுள்ளது.
பிரான்ஸ் அரசு, தங்கள் நாட்டிற்குள்ளாக இரண்டரை மணி நேரத்திற்குள் ரயிலில் செல்லக்கூடிய இடங்களுக்கெல்லாம் உள்நாட்டு விமான சேவையை தடை செய்ய தீர்மானித்திருக்கிறது. மேலும் ஆளும்கட்சியினுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த திட்டத்திற்கு ஆதரவு அளித்து வாக்களிக்கிறார்கள்.
மேலும் இது தொடர்பாக நடத்தப்பட்ட கடுமையான விவாதத்தினையடுத்து, ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் பருவநிலை மாற்றத்திற்காக இத்திட்டத்தை பரிந்துரைக்க நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் இந்த திட்டமானது, உள்ளூர் விமான சேவைகள் குறைக்கப்பட்டால், காற்று மாசுபாடை குறைக்க முடியும் என்ற நோக்கத்தில் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
எனினும் எதிர்க்கட்சியினர், இந்த திட்டத்தினால் விமான நிலையங்களில் பணிபுரிபவர்கள் பணியை இழக்க நேரும் என்று குற்றம் சாட்டுகின்றனர். மேலும் ஏற்கனவே பல்வேறு நாடுகளில் இதுபோன்ற காற்று மாசுக்கள் கட்டுப்படுத்த பல முயற்சிகளை கையாண்டு அதனை சரியாக பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளது. எனவே இந்த நாடுகள் பிரான்ஸ் மேற்கொண்டிருக்கும் இந்த நடவடிக்கையை உற்று நோக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.