Categories
மாவட்ட செய்திகள்

உளுந்தூர்பேட்டையில் 261பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா – எம்.எல்.ஏ குமரகுரு வழங்கினார் …!!

உளுந்தூர்பேட்டையில் 261 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் விவசாய பயிர்க் கடன் தள்ளுபடி சான்றிதழை எம்.எல்.ஏ குமரகுரு வழங்கினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஏழை – எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் விவசாய பயிர்க் கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி திருக்கோவிலூர் கோட்டாட்சியர் சாய்வு தரணி  தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு கலந்து கொண்டு 261 நபருக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் விவசாய பயிர் கடன்களை தள்ளுபடி செய்த தமிழக அரசு சான்றிதழை வழங்கி சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில்  வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை உட்பட அரசு அலுவலர்களும், ஊழியர்களும், அதிமுக நிர்வாகிகளும், பொதுமக்களும் பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |