உலகம் முதலுதவி தினத்தை முன்னிட்டு ஒரே இடத்தில் 5386 மாணவ-மாணவிகள் பயிற்சி பெற்று உலக சாதனை படைத்தார்கள்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மைதானத்தில் உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து மாபெரும் உலக சாதனையாக பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற முதல் உதவி விழிப்புணர்வு செய்முறை நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க அரசுப்பள்ளி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், தனியார் பொறியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் என 5386 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் மயக்கத்தில் இருப்பவரை உடனடியாக அவருக்கு அடிப்படை முதலில் சிகிச்சைக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் 108 ஆம்புலன்ஸ்கள், மருத்துவக் குழு தயார் நிலையில் இருந்தது.
இங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. கோவையில் உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு உலக சாதனை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இதில் 49 கல்வி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக போதை பொருட்களுக்கு எதிரான உறுதி மொழியும் ஒரே இடத்தில் 5356 மாணவ-மாணவிகள் எடுத்துக் கொண்டார்கள் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.