கம்போடியா பகுதியிலுள்ள அங்கோர்வாட் கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் கோவில் 12ஆம் நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்த சூரியவர்மன் என்ற மன்னரால் கட்டப்பட்டது. இந்த கோவில் யுனெஸ்கோவால் உலக மரபுச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பன்னாட்டு விமான போக்குவரத்து சீரடைந்துள்ளதால் இந்த அங்கோர்வாட் கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையானது அதிகரித்துக் கொண்டே வருகிறது.