Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உலக மகளிர் தினம் …. நடைபெற்ற முகாம் …. விழிப்புணர்வை ஏற்படுத்திய நீதிபதி….!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு  விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வைத்து வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில்  மாவட்ட கூடுதல் நீதிபதி கே.விஜயா சார்பு நீதிபதி ஜெயவேல், மாவட்ட உரிமையியல் நீதிபதி சதீஷ்குமார், ஆரணி நகராட்சி ஆணையர் பி. தமிழ்ச்செல்வி, வக்கீல் சங்க தலைவர் எஸ். ஸ்ரீதர், செயலாளர் பாலாஜி, அரசு வக்கீல்கள் ராஜமூர்த்தி, கே. ஆர். ராஜா, எஸ் .கைலாஷ், மாவட்ட பெண்கள் பாதுகாப்பு அலுவலர் ஜி. கோமதி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் மாவட்ட கூடுதல் நீதிபதி கே.விஜயா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இன்று வேலைவாய்ப்பிலும், படிப்பிலும் பெண்களுக்கு தனியாக  33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  பெண்கள் இன்று அனைத்து துறைகளிலும் சாதனை செய்து வருவதற்கான கரணம் பெரியார், அம்பேத்கார் எனவும்,  தற்போது அனைத்து துறைகளில் பெண்கள் பங்கு அதிகமாக இருக்கிறது. இதனால் வரதட்சனை குற்றங்கள் குறைந்து வருகிறது என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |