27வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியானது ஜப்பான் தலை நகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இவற்றில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர்பிரிவு கால்இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டமொன்றில் இந்தியாவின் எம் ஆர் அர்ஜுன், துருவ் கபிலா இணை கால்இறுதி சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரின் கேஎச் லோ மற்றும் எச் டெர்ரி ஜோடியை எதிர்த்து களமிறங்கிய இந்திய ஜோடி, முதல் செட்டை இழந்தது.
இருப்பினும் அடுத்த 2 செட்களை கைப்பற்றி 18-21, 21-15, 21-16 எனும் செட் கணக்கில் வெற்றியடைந்தது. மற்றொரு ஆண்கள் இரட்டையர்பிரிவு கால் இறுதிக்கு முந்தைய சுற்றுபோட்டியில், இந்தியாவின் சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி இணை டென்மார்க் அணியினரை எதிர்கொள்கின்றனர்.