Categories
தேசிய செய்திகள்

உலக பிரசித்தி பெற்ற கோவில்…. படி பூஜை இனி தடைபடாது…. ஹைட்ராலிக் மேற்கூரை அமைக்க முடிவு….!!!!!!!!

சபரிமலை ஐயப்பன் கோவில் படி பூஜை தடைபடுவதால்  ஹைட்ராலிக் மேற்கூரை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உலகப் பிரசித்தி பெற்றதாக சபரிமலை ஐயப்ப சாமி கோவில் விளங்குகிறது. ஒவ்வொரு தமிழ் மாதத்தின் தொடக்கத்தின் போதும் இந்த கோவிலில் திறக்கப்பட்டு மாத பூஜை செய்வது வழக்கமான ஒன்றாகும்.சபரிமலை ஐயப்பன் கோவிலில் பம்பா நதியும், பதினெட்டாம்படி மகரவிளக்கு மிகவும் புனிதமானதாக ஒன்றாக கருதப்படுகிறது. பல மலைகளை கடந்து கல்லும், முள்ளும் மிதித்து ஐயப்பனை காண பக்தர்கள் பக்தியுடன் சபரிமலைக்கு வருவது வழக்கமான ஒன்றாகும். அதில் மிக முக்கியமாக பார்க்கப்படுவது பதினெட்டாம் படியில் ஏறுவதாகவும் எந்த பக்தர்கள் தலையில் இருமுடி உடன் வருகின்றாரோ அவர்கள்  மட்டுமே ஐயனை பதினெட்டாம் படி வழியாக சென்று தரிசனம் செய்ய அனுமதிக்கப் படுகின்றார்கள்.

மேலும் ஒவ்வொரு மாதமும் கோயிலில் திறக்கப்படும்போது படி பூஜை செய்யப்படுவது வழக்கமாகும். படி பூஜை நடத்துவதற்கு ரூபாய் 75 ஆயிரம் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. இந்த நிலையில் படி பூஜை நடத்தப்படும் நேரம் அடை மழை பெய்தால்  பூஜை தடைபடும். மேலும் சில நேரங்களில் படி பூஜை நடக்க முடியாத சூழ்நிலையும் இருந்தது. பதினெட்டாம் படி பூஜை நடத்தப்படும் நேரத்தில் மழை பெய்தால் பூஜைக்காக தார்ப்பாய் சீட் போட்டு பூஜை செய்வது வழக்கமாகும். இந்த நிலையில் அதற்கு மாறாக நிரந்தரமாக ஒரு கண்ணாடி மேற்கூரை அமைக்கப்பட்டு இருக்கின்றது.

கண்ணாடி மேற்கூரையில் சூரிய ஒளி கொடி மரத்தின் மீது விழுவது இல்லை என கூறப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக இந்த ஹைட்ராலிக் மேற்கூரை அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இதற்காக ஹைதராபாத் தளமாகக் கொண்ட விஷ்வ சமுத்திரா என்ற கட்டுமான நிறுவனம் சபரிமலை கோவிலுக்கு 70 லட்சம் ரூபாய் காணிக்கையாக வழங்கி இருக்கின்றது.

இந்த நிலையில் இந்த ஹைட்ராலிக் மேற்கூரை படி பூஜை நேரத்தில் மழை பெய்தால் மூடும் வகையிலும் மற்ற நேரங்களில் இருபுறமும் மடித்து வைக்கும் வகையிலும் அமைக்கப்படுகின்றது. மேற்கூரை அமைக்கும் பணி தொடங்க ஹைகோர்ட் அனுமதி பெறப்பட்டிருக்கிறது. மேலும் மேற்கூரை  அமைப்பதற்கான பதினெட்டாம் படியின் முன்பக்கம் உள்ள கருங்கற்கள் மாற்றப்பட்டு கிரானைட் தரை அமைத்து அழகுபடுத்தப்பட்ட இருக்கின்றது.

Categories

Tech |