உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படம் உலக அளவில் 400 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படம் அடுத்த மாதம் 8-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விக்ரம் படத்தில் இடம்பெற்ற பத்தல பத்தல பாடல் செம ஹிட் ஆனது. இந்தப் பாடலின் வீடியோவுக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், ஜூலை 1-ம் தேதி பத்தல பத்தல பாடலின் வீடியோ வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பாடல் இன்று மாலை இணையத்தில் வெளியானது. இதன் காரணமாக உலகநாயகன் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.