ரஷியா செய்வது வெட்கக்கேடான செயல் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
ஐ.நா.வின் 77-வது பொது சபை கூட்டம் நடைபெற்றது. இதில் உலகில் உள்ள பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியதாவது. வேறு நாட்டினர் மீது ரஷியா தொடுக்கும் போர் வெட்கக்கேடான செயல். மேலும் ஐக்கிய நாடுகள் வாசகத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய கொள்கையை ரஷியா மீறியுள்ளது. மேலும் ரஷியா உக்ரைனை கைப்பற்றும் நோக்கில் பழைய ரஷிய வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
எனவே ரஷியாவின் அத்துமீறலை உலக நாடுகள் கவனிக்க வேண்டும். மேலும் ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனில் சில பிராந்தியங்களை பொது வாக்கெடுப்பு நடத்தி அவற்றை ரஷியாவுடன் இணைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் ரஷ்யா 3 லட்சம் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது என அவர் கூறியுள்ளார்.