Categories
பல்சுவை

“உலக தந்தையர் தினம்” தந்தைக்கு நிகர் உலகில் வேறு யார்….?

  • தந்தை என்பவர் அனைவரையும் விட மிகச்சிறந்த முறையில் நமக்கு நன்மையை செய்யக்கூடியவர்.
  • தந்தையின் வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு தெளிவான ஒரு புத்தகம் ஆகும். அதையும் பாடமாக படிக்க வேண்டியது அவசியம்.
  • தந்தைக்கு முன்பு பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுங்கள். இது தந்தைக்கு தரும் முதல் மரியாதை ஆகும்.
  • தந்தை சொல்வதை கவனமாக கேளுங்கள். ஏனென்றால் பிறர் நமக்குச் சொல்லும் நிலைமை வரக்கூடாது அல்லவா?
  • தந்தைக்கு மரியாதை கொடுங்கள். அதனால் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மரியாதை கொடுக்கக் கூடும்.

  • தந்தையின் கண்டிப்பை பொறுத்துக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு உயர்வைக் கொடுக்கும்.
  • தந்தை ஒரு குரு. எனவே அவர் முன்பு குரலை உயர்த்த வேண்டாம்.
  • முகம் தெரியாத யாருக்கும் மரியாதை செய்கின்றோம். அதேபோன்று நமது தந்தைக்கும் மரியாதை செய்வோம்.
  • தான் பார்க்காத உலகத்தை என் பிள்ளை பார்க்க வேண்டும் என்று தன் தோளின் மேல் தூக்கி காட்டுபவன் தந்தை.
  • தந்தையை போல் உண்மையான நண்பன் உலகில் யாரும் இல்லை.
  • தந்தையை மதித்து நடந்தால் இன்பம். மதிக்காதவன் வாழ்வில் துன்பம்.

Categories

Tech |