Categories
மாநில செய்திகள்

உலக செஸ் கூட்டமைப்பு: துணைத் தலைவராக தேர்வான விஸ்வநாதன் ஆனந்த்…. வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின்….!!!!

செஸ் வீரரான விஸ்வநாதன் ஆனந்த் உலக செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு தமிழக முதல்வர் கஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்தில், விஸ்வநாதன் ஆனந்த் உலக செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதற்கு என் நெஞ்சார்ந்த  வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது தமிழகத்திற்கே பெருமையான தருணம்.

விஸ்வநாதன் போன்ற மாசற்றநேர்மை, ஒருமைப்பாடு மற்றும் பரந்த அனுபவமும் கொண்ட ஒருவர் உலக செஸ்கூட்டமைப்பின் துணைத் தலைவராக இருப்பதால் இந்த விளையாட்டின் எதிர் காலம் சிறப்பாக அமையும். அதேபோன்று உலக செஸ்கூட்டமைப்பின் தலைவராக மீண்டுமாக தேர்வாகியுள்ள அர்காடி வோர்கோவிச்சுக்கும் என் வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்துவதில் அவருடைய பங்கு இன்றியமையாததாகும். தலைவராக அவருடைய முதல் பதவிக் காலம் வெற்றிகரமாக அமைந்ததை போன்று 2வது பதவிகாலமும் அமையும் என்று நம்புகிறேன் என ஸ்டாலின் கூறியுள்ளார்

Categories

Tech |