Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

உலக கோப்பையை வென்றால்…. “பாகிஸ்தான் பிரதமர் ஆவார் பாபர் அசாம்”…. இந்திய முன்னாள் வீரர் கல கல..!!

“பாகிஸ்தான் உலகக் கோப்பையை வென்றால், 2048 இல் பாபர் அசாம் பாகிஸ்தானின் பிரதமராக இருப்பார்” என்று கவாஸ்கர் ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

2022 ஐசிசி டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் நாளை மெல்போர்ன் ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. பாகிஸ்தான் நாட்டு ரசிகர்கள் 1992 உலகக் கோப்பை போல தற்போது இந்த உலகக்கோப்பை நடைபெறுவதாக அவர்கள் நினைக்கின்றனர். ஏனெனில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் மற்ற அணிகளின் உதவியுடன் பாகிஸ்தான் அரையிறுதிக்குள் நுழைந்தது.

அதேபோல இந்த முறையும் பாகிஸ்தான் அதிஷ்டத்தின் படி நெதர்லாந்து அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியதால் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. 1992-ல் மெல்போர்னில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை  வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அப்போது பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இம்ரான் கான் இருந்தார். அதன்பின் இம்ரான் கான் அரசியலில் ஈடுபட்டு பிரதமராகவும் ஆனார்.

இந்நிலையில் 1992 உலகக் கோப்பை தொடரை இந்த தொடருடன் பாகிஸ்தான் ரசிகர்கள் ஒப்பிட்டு வரும் வேளையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் “பாகிஸ்தான் உலகக் கோப்பையை வென்றால், 2048 இல் பாபர் அசாம் பாகிஸ்தானின் பிரதமராக இருப்பார்” என்று ஸ்போர்ட்ஸுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது, 1992 இல் உலகக் கோப்பையை வென்ற இம்ரான் கான், பின்னர் அரசியலில் ஈடுபட்டு, இறுதியில் 26 ஆண்டுகளுக்கு பிறகு தனது நாட்டின் பிரதமரானார். இம்ரானின் உலகக் கோப்பையை வென்ற சாதனையை பாபரால் மீண்டும் செய்ய முடிந்தால்,  தற்போதிலிருந்து 26 ஆண்டுகளுக்கு பிறகு அவர் பிரதமராக முடியும் என்று கவாஸ்கர் நகைச்சுவையாக கூறினார்.

Categories

Tech |