Categories
சினிமா

உலக அளவில் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்…. 500 கோடியை அள்ளி வசூலில் மாபெரும் சாதனை….!!!!

உலகப் புகழ் பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இந்த திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், கார்த்தி உள்ளிட்ட பல நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் பொன்னியின் செல்வன் 1 கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியிடப்பட்டது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் உலக அளவில் 500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. குறிப்பாக தீபாவளிக்கு பிரின்ஸ் மற்றும் சர்தார் ஆகிய திரைப்படங்கள் வெளியானாலும் பண்டிகை கால விடுமுறை நாள் வசூல் ரேசில் பொன்னியின் செல்வன் முன்னிலையில் உள்ளது. இன்னும் சில நாட்களில் 600 கோடியை தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |