ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்.
அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி மையம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஜேம்ஸ் வெப் என்ற தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியது. இது உலகத்திலேயே மிகப்பெரிய மற்றும் சக்தி வாய்ந்த தொலைநோக்கியாகும். இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை உருவாக்குவதற்கு 10 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொலைநோக்கி மூலம் விண்வெளியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நாசா வெளியிட்டது.
கடந்த 1380 கோடி வருடங்களுக்கு முன்பாக பிக் பேங் எனப்படும் பெருவெடிப்பு மூலமாக விண்வெளி உருவானதாக கூறப்படுகிறது. இந்த பிரபஞ்சத்தில் நம்முடைய பூமி இடம் பெற்றுள்ள பால்வெளி மண்டலம் உட்பட கோடிக்கணக்கான மண்டலங்கள் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் ஜேம்ஸ் வெப் தொலை நோக்கியானது ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தின் முன்பகுதி மற்றும் பின் பகுதியில் ஏராளமான நட்சத்திரங்கள் ஜொலிக்கிறது. இந்த புகைப்படத்தின் ஒரு பகுதி உலகம் தோன்றிய ஆரம்பகால கட்டத்தை காட்டுவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தொலைநோக்கிக்கு வைக்கப்பட்டுள்ள ஜேம்ஸ் வெப் என்ற பெயர் ஜேம்ஸ் எட்வின் வெப் என்பவரின் ஞாபகமாக வைக்கப்பட்டுள்ளது. இவரைப் பற்றிய சில தகவல்களை பார்க்கலாம். கடந்த 1906-ம் ஆண்டு கலிபோர்னியா மாகாணத்தில் பிறந்த ஜேம்ஸ் எட்வின் வெப் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்து விட்டு ராணுவத்தில் சேர்ந்தார்.
கடந்த 1945-ம் ஆண்டு கடற்படை தளபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பின் அமெரிக்க அதிபர் ஹாரிஸ் எஸ்.டிரமனின் துணைச் செயலாளராக பணியாற்றினார். கடந்த 1961-ம் ஆண்டு அதிபர் ஜான் எஃப் கென்னடி ஜேம்ஸ் வெப்பை நாசாவின் தலைமைச் செயலாளராக நியமித்ததில் இருந்து நாசாவின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். இவருக்கு அப்பல்லோ திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டிய அழுத்தம் இருந்த போதிலும், ஜான்சன் விண்வெளி மையம் மற்றும் மனிதர்களைக் கொண்ட விண்வெளி மையத்தை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்தார். இதனையடுத்து பையனியர், மரைனர் விண்கல திட்டங்களுடன் நாசா பிரபஞ்ச ஆய்வு திட்டத்தை மேற்கொள்வதையும் உறுதி செய்தார்.
இவர் நாசா வளர்ச்சிக்காக பல்வேறு முயற்சிகளை செய்திருந்தார். கடந்த 1967-ஆம் ஆண்டு அப்பல்லோ 1 சோதனையின்போது விண்கலம் வெடித்து சிதறியதில் 3 வேறு உயிரிழந்தது தொடர்பாக விசாரணைக்கு ஆஜர் படுத்தப்பட்டார். கடந்த 1968-ஆம் ஆண்டு நாசா பொறுப்புகளில் இருந்து ஓய்வு பெற்ற ஜேம்ஸ் வெப் கடந்த 1992-ம் ஆண்டு மறைந்தார். மேலும் கடந்த 1969-ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட அப்பல்லோ 1 விண்கலத்தில் சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் குழுவினர் நிலவில் வெற்றிகரமாக கால் வைத்தது உலகையே பிரமிப்பில் ஆழ்த்தியது. இதில் ஜேம்ஸ் வெப்புக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு. இதன் காரணமாகத்தான் தற்போது விண்ணில் செலுத்தப்பட்ட விண்கலத்திற்கு ஜேம்ஸ் வெப் என்ற பெயரை வைத்துள்ளனர்.