Categories
சினிமா தமிழ் சினிமா

உலகை திரும்பி பார்க்க வைத்து…. “தமிழ் சினிமா உலகை பெருமைப்படுத்திய இயக்குனர்கள்”…. இதோ ஒரு பார்வை…!!!

அண்மைக் காலமாகவே தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் புதுவிதமான கதைக்களத்தோடு சந்திக்கிறார்கள். இது உலக சினிமாவரை பேசப்படுகின்றது. அப்படி பெருமை சேர்த்த இரண்டு இயக்குனர்களைப் பற்றி நாம் காண்போம்.

பார்த்திபன்: இவர் புதிய பாதை என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா வாழ்க்கையை தொடங்கினார். இவர் ஒவ்வொரு திரைப்படத்திலும் நடிகராகவும் இயக்குனராகவும் நம்மை வியக்க வைத்துள்ளார். அண்மையில் இவர் இயக்கி, நடித்து, தயாரித்து வெளிவந்த திரைப்படம் ஒத்த செருப்பு. ஒருவர் மட்டுமே நடித்து பார்ப்பவர்களுக்கு சலிப்புத் தட்டாமல் படம் எடுத்தது வியப்புக்குரிய ஒன்றாகும். இத்திரைப்படத்தை இந்தோனேஷியாவில் எடுக்கப்போவது போற்றுதலுக்குரியது. இத்திரைப்படத்தை பார்த்திபன் துணிச்சலாக செய்திருக்கிறார். இப்படத்திற்காக நேஷனல் பிலிம் ஜூரி விருதை தட்டிச்சென்றுள்ளார். இத்திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைக்காமல் போனதால் பார்த்திபன் தற்போது இரவின் நிழல் திரைப்படத்தை தீவிரமாக இயக்கி வருகின்றார்.

 

தியாகராஜன் குமாரராஜா: இவரின் முதல் திரைப்படமான ஆரண்ய காண்டம், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே தேசிய விருதை பெற்றது பெருமைக்குரிய ஒன்றாகும். இதை தொடர்ந்து இவர் விஜய் சேதுபதி, ரம்யா கிருஷ்ணன், மிஸ்கின் உள்ளிட்ட நடிகர்களை வைத்து இயக்கிய சூப்பர் டீலக்ஸ் திரைப்படமும் பல விருதுகளை பெற்றிருக்கின்றது. இத்திரைப்படத்தில் நடித்த விஜய் சேதுபதி சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |