சிறுமிகளை பாதுகாப்பதற்காக தனியாக ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
மும்பையில் உள்ள வசாய் பகுதியில் ஷரத்தா என்பவர் வசித்து வருகிறார். இவரை அவரது காதலன் அப்தாப் அமீன் கடந்த ஆண்டு மே மாதம் கழுத்தை நெரித்து படுகொலை செய்தார். இதனையடுத்து அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்து பின்னர் அதை பல்வேறு இடங்களில் தூக்கி எரிந்துள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த கொடூர படுகொலை சம்பவத்தால் சிறுமிகளுக்கு உதவ மராட்டிய மாநில அரசு சிறப்பு படையை அமைத்துள்ளது. இந்நிலையில் தங்கள் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொள்ளும் சிறுமிகளுக்கான தனிப்படை அமைப்பை அமைக்க வேண்டும் என மகளிர் ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த உத்தரவின் படி பெண்கள் ஆணையம் மற்றும் மாநில குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இணைந்து வீட்டை விட்டு ஓடிப்போன அனைத்து பெண்களுக்கும் ஆதரவாக ஒரு குழுவை உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் உள்ள பிரபாத் லோதா கூறியதாவது. இளம் பெண்களுக்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் டெல்லியில் நடந்த வழக்கில் சிறுமிகளுக்கு 18 வயதாகும்போது அவர்களை குடும்பத்தினர் மற்றும் போலீசார் தடுக்க முடியாது. இதனால் அந்த சூழ்நிலையில் சிறுமிகள் குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்து கொள்கிறார்கள். இதன் மூலம் அவர்களது குடும்பத்தில் இருந்து அவர்களுக்கு எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இதுபோன்ற சூழ்நிலையில் மற்ற சிறுமிகளுக்கு நடக்காமல் இருப்பதை இந்த குழு உறுதி செய்யும். மேலும் இந்த குழு அத்தகைய சிறுமிகளுக்கு தேவையான உதவி மற்றும் பாதுகாப்பை வழங்கும் என அவர் கூறியுள்ளார்.