உலகம் முழுவதிலும் கொரோனா நோயாளிகளுக்கு பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்கள் 7 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதிலும் கொரோனா பரவல் தீவிரமடைந்து கொண்டிருக்கும் நிலையில், நோயாளிகளுக்கு துணிச்சலுடன் சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் சுகாதார பணியாளர்களின் சேவை மிகுந்த பாராட்டுக்குரியது. ஆனால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் உடைகள் உள்ளிட்டவை எதுவும் சரிவர கிடைப்பதில்லை. அதனால் அவர்களின் வாழ்வு பாதிக்கப்படும் நிலையும், அவர்களில் சிலர் உயிரிழக்கும் ஆபத்தும் உண்டாகியுள்ளது. சர்வதேச அமைப்பு இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரை அடிப்படையாக கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது.
சர்வதேச அமைப்பு கொரோனா நோயாளிகளுக்கு உறுதுணையாக இருக்கும் சுகாதார பணியாளர்களின் நிலை குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. இதுகுறித்து அந்த அமைப்பின் பொருளாதார மற்றும் சமூக நீதி தலைவர் ஸ்டீவ் காக்பர்ன் கூறுகையில், ” ஒவ்வொரு சுகாதார பணியாளருக்கும் பணி பாதுகாப்புக்கான உரிமை இருக்கின்றது. மெக்சிகோ, பிரேசில் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் கொரோனா பாதிப்பு பல மாதங்களாகியுள்ள நிலையிலும் சுகாதாரப் பணியாளர்கள் அதிக அளவில் உயிரிழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
அதன்படி மெக்சிகோ நாட்டில் 1,320 சுகாதார பணியாளர்களும், அமெரிக்காவில் 1,077 பேரும், இங்கிலாந்தில் 649 பேரும், பிரேசிலில் 634 பேரும், ரஷ்யாவில் 631 பேரும் மற்றும் இந்தியாவில் 573 சுகாதாரப் பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதுதவிர லத்தின் அமெரிக்க நாடுகளில் 97,632 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா, பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பாதுகாப்பு உபகரணங்கள் பற்றாக்குறை மற்றும் போதிய இடவசதி இல்லாத பணி சூழல் ஆகியவை உண்டாகியுள்ளன.