Categories
உலக செய்திகள்

உலகையே உலுக்கிய சிறுவனின் மரணம்….! போப் பிரான்சிஸ் திடீர் சந்திப்பு …!!

மத்தியதரைக் கடலைக் கடக்கும் போது நீரில் மூழ்கி இறந்த 3 வயது சிறுவனின் தந்தையை போப் பிரான்சிஸ் சந்தித்து பேசியுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு 3 வயது சிறுவனான ஆலன் குர்தி மத்திய தரைக் கடலைக் கடக்கும் போது நீரில் மூழ்கி இறந்துள்ளான். சிறுவனின் சடலம் துர்க்கி கடற்பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில் அவனின் புகைப்படம் உலகையே உலுக்கியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஈராக்கில் திருப்பலி  ஒன்றை நிறைவேற்றிய  போப் பிரான்சிஸ் சிறுவனின் தந்தையான அப்துல்லா குர்தியை சந்தித்து அவரிடம் நீண்டநேரம் பேசியுள்ளார் .போப் ஆண்டவரின் அன்பான பேச்சுக்கு அப்துல்லா நன்றி கூறியுள்ளார் .

இந்த விபத்து சிரியாவில் கோப்பேன் நகரை சேர்ந்த குர்தி குடும்பத்தினர் துருக்கியிலிருந்து கிரேக்கத்திற்கு  ஒரு சிறிய படகில் செல்லும் போது படகு கவிழ்ந்ததால் ஏற்பட்டுள்ளது . அதிலிருந்த சிறுவன் ஆலன் குர்தியும் ,அவரது சகோதரிகளில் ஒருவரும் ,தாயும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனை அடுத்து சிறுவனின் சடலம் துருக்கி கடற்கரையோரத்தில் கண்டறியப்பட்டது.விபத்து குறித்து பலரும் கருத்து தெரிவித்தனர் .

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வசிக்கும் டிமா குர்தி என்ற உறவினரின் உதவியால் சிறுவனின்  உறவினர்கள் கனடாவுக்கு வர முயற்சி செய்த தகவல் வெளியானதை தொடர்ந்து கனடா அரசாங்கம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

Categories

Tech |