Categories
தேசிய செய்திகள்

உலகுக்கு இந்தியா வழங்கியுள்ள பெரும் பரிசு யோகா – மோடி பெருமிதம்

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70ஆயிரத்தை உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. 2,300க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில்கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 17 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் ஊரடங்கு உத்தரவானது இரண்டாம் முறையாக மே 17ம் தேதி வரை நீடிக்கப்பட்டது.

PM Modi Angry On Those Ministers - Gulte English | DailyHunt

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவானது முடியவடைய இன்னும் 5 நாட்களே இருக்கும் நிலையில் நேற்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனை 6 மணி நேரத்துக்கும் அதிகமாக நடைபெற்றது. இதில் ஊரடங்கை மேலும் நீடித்து அதிகாடியான தளர்வுகளை கொடுக்கலாம் என்றும், மாநில முதல்வர்கள் 15ஆம் தேதி ஒரு அறிக்கையை மத்திய அரசுக்கு கொடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தியதாக சொல்லப்படுகின்றது.

PM Modi Angry on Cabinet Ministers skipping Parliament session ...

இந்த நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் பேசுவதாக காலை பிரதமர் அலுவலகம் தெரிவித்ததையடுத்து தற்போது பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசி வருகின்றார். அதில், ஒரு நாளைக்கு 2 லட்சம் மருத்துவ பாதுகாப்பு கவசம் மற்றும் N95 கவசம் தயாரிக்கும் நாடாக இருக்கிறோம். y2k பிரச்னையை எப்படி கடந்து வந்தோமோ, அதே போல் இந்தியாவால் இதையும் வெல்ல முடியும். இந்த சிக்கலை தனக்கான வாய்ப்பாக இந்தியா மாறிக் கொண்டிருக்கிறது.

Those responsible for all big scams also standing in queue to ...

கோடிக்கணக்கான மக்கள் கடுமையான சூழலை சந்தித்து வருகின்றனர். இது விட்டுவிடும் நேரமல்ல. இது வெற்றி பெற வேண்டிய நேரம். உலகின் கொள்கைகளை இந்தியா மாற்றி வருகிறது. தன்னம்பிக்கை நிறைந்த இந்தியா இன்று உலகிலேயே முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இந்த சிக்கலை தனக்கான வாய்ப்பாக இந்தியா மாற்றிக்கொண்டிருக்கிறது. உலகுக்கு இந்தியா வழங்கியுள்ள பெரும் பரிசு யோகா பயிற்சிகள் ஆகும். உலகம் என்பது ஒரே குடும்பம் தான் என்பது  இந்தியாவின் நிலை நமக்கு எப்போதும் சுயநலமில்லை.
யாரையும் சார்ந்திராமல் தன்ன்னம்பிக்கையுடன் இருப்போம் என 130 கோடி  இந்தியர்களும் உறுதி ஏற்க வேண்டும். தன்னிறைவு பெற்ற இந்தியா உருவாகும். எந்த ஒரு இலக்கையும் அடைவது சாத்தியமில்லை என்பதே இந்திஅயவுக்கு இல்லை. இந்திய மருந்துகள் உலகிற்கே தன்னம்பிக்கை கொடுத்து வருகிறது. மனித நேயம் தோற்காது களைப்பும் அடையாது. இந்தியாவின் வளர்ச்சியில்  5 முக்கிய அம்சங்களை கொண்டது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிதம் கொரோனாவுக்கு எதிரான போருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |