Categories
உலக செய்திகள்

உலகில் அரிய வகை திமிங்கல சுறா… இதை காண்பது மிகவும் அரிது… அபுதாபி மக்களுக்கு எச்சரிக்கை…!!!

அபுதாபியில் உள்ள கடல் பகுதியில் மிக அரிய வகை 23 அடி நீளமுள்ள திமிங்கல சுறா கண்டறியப்பட்டுள்ளது.

அபுதாபி சுற்றுச்சூழல் ஏஜென்சி இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பது, “ஆங்கிலத்தில் ‘வேல் ஷார்க்’ என்று அழைக்கப்படுகின்ற திமிங்கல சுறா உலகில் அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக உள்ளது. அவை 62 அடி நீளம் வரை வளரக்கூடியவை. அதன் வாயில் 300 அடுக்குகளில் சிறிய பருக்கள் மற்றும் இரவு உணவை வடிகட்டி விரும்பக்கூடிய அமைப்புகளை கொண்டுள்ளது. அவள் வடிகட்டி உண்ணக் கூடியவை என்பதால் கடலில் இருக்கின்ற சிறு மீன்கள், நண்டு மற்றும் நீர் முட்டைகளை உணவாக எடுத்துக் கொள்கிறது. உலக அளவில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 168 திமிங்கல சுறாக்கள் மட்டுமே வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.

இத்தகைய சிறப்பு அம்சங்களைக் கொண்ட அந்த அரிய வகை திமிங்கல சுறா அபுதாபியில் இருக்கின்ற பஹியா கடல் கால்வாயில் உள்ளது. அது 23 அடி நீளமுள்ள ஆண் சுரா என்று கண்டறியப்பட்டுள்ளது. அது அழிந்து வரும் இனமாக இருப்பதால் பொதுமக்கள் எவரும் அப்பகுதியின் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி அப்பகுதியில் நீந்துவது, ஒலிப்பது மற்றும் உணவு அளிப்பது போன்ற செயல்களை செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய வகை திமிங்கல சுறா மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிப்பது இல்லை”

Categories

Tech |