Categories
உலக செய்திகள்

உலகில் அதிக செலவு மிகுந்த நகரம் எது தெரியுமா….??? அடேங்கப்பா இதுதானா…..!!!

உலகில் மக்கள் வாழ அதிக செலவாகும் நகரமாக இஸ்ரேலில் உள்ள ஒரு நகரம் திகழ்வது ஆய்வு முடிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகில் மக்கள் வாழ அதிக செலவாகும் நகரம் எது எனும் கணக்கெடுப்பு சமீபத்தில் நடைபெற்றது. இந்த கணக்கெடுப்பில் கடந்த ஆண்டில் முதலிடம் வகித்த பாரிஸ் சுரிச் மற்றும் ஹாங்காங் நகரங்கள் முன்னிலை வகிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் இஸ்ரேல் நாட்டிலுள்ள டெல் அவிவ் நகரம் முதலிடம் பிடித்தது. உலகில் அதிகரித்து வரும் பண வீக்கத்தால் போக்குவரத்துக்கான செலவு அதிகரித்துள்ளது மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருட்களின் விலை 3.5 சதவிகிதம் உயர்ந்ததற்கு கொரோனா பரவலும் அதற்கான பொது ஊரடங்கும் ஒரு காரணமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் போக்குவரத்து செலவு அதிகம் இதனால் பொருட்களின் விலையும் அதிகமாக உள்ளது . கடந்த முறை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் டெல் அவீவ் ஐந்தாவது இடத்தில் இருந்தது தற்போது முதலிடம் பிடித்துள்ளது. சுரிச் மற்றும் ஹாங்காங் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. நியூயார்க் 6-வது இடத்திலும் ஜெனிவா 7-வது இடத்திலும் உள்ளது பாரீஸ் மற்றும் சிங்கப்பூர் நகரங்கள் இரண்டாம் இடம் வகிக்கின்றன. உலகில் தற்போது பணவீக்கம் அதிகரித்துள்ளதால் கராக்கஸ், டமாஸ்கஸ், பியூனஸ் ஏர்ஸ், போன்ற நகரங்கள் கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

Categories

Tech |